திரு கு. சரவணன்
துறைத்தலைவர்
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
தன்விவரம்
திரு கு. சரவணன் தற்போது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் துறைத்தலைவராகப் பணிபுரிகிறார். இவருக்கு இரண்டு பதின்ம வயது பிள்ளைகள் உள்ளனர். இவரின் மூத்த மகளுக்குப் பத்தொன்பது வயது; இளைய மகனுக்குப் பதினாறு வயது. தம் பிள்ளைகளிடத்தில் விழுமியங்களை வளர்ப்பதிலும் அவர்களைப் பண்படுத்துவதிலும் இவர் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார். இவர் பெற்றோராகவும் மொழி ஆசிரியராகவும் தமது அனுபவங்களையும் தாம் மேற்கொண்ட உத்திகளையும் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
Profile
Mr K. Saravanan is currently serving as the HOD at Umar Pulavar Tamil Language Centre. As a parent of two teenagers aged 19 and 16, he has, himself, encountered challenges in instilling values and cultural awareness in his children. As both a parent and a language teacher, he aims to share his experiences and the strategies he developed in addressing these challenges.
சுருக்கவுரை
இந்தப் பயிலரங்கு, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஆசிரியராலும் பெற்றோர் ஆதரவுக் குழுவின் உறுப்பினரான இளம் பெற்றோராலும் வழிநடத்தப்படுகிறது. வகுப்பறைச் சூழலுக்கு அப்பால் வீட்டிலும் தமிழ்மொழியை வளர்க்கலாம். மொழி வளர்ச்சியில் பெற்றோர் பெரும் பங்கு ஆற்றுகின்றனர். வீட்டிலேயே எவ்வாறு மொழி விளையாட்டின் மூலம் பெற்றோர் தமிழ்மொழியில் தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் ஈடுபாட்டை மேம்படுத்தலாம் என்பதைக் குறித்து இப்பயிலரங்கில் அறிந்துகொள்ளலாம்.
Synopsis
This session aims to empower parents with practical strategies to foster an environment where the Tamil Language thrives beyond the classroom. Recognizing the pivotal role parents play in language development, the sharing focuses on practical, everyday tips to seamlessly integrate Tamil Language into the home setting, including interactive storytelling sessions, playful language games, and cultural immersion.