செல்வி சைனப்
நூலகர்
தேசிய நூலக வாரியம்
தன்விவரம்
செல்வி சைனப், தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவில் நூலகராகப் பணியாற்றுகிறார். இவர் மின்நூல்களைத் தேர்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் உரிய புனைகதை தொகுப்புகளைப்பற்றி நன்கு அறிந்தவர் இவர். மேலும், இவர் உள்ளடக்க மேம்பாடு, புத்தக மன்றங்கள், பாலர்பள்ளிச் சிறுவர்களுக்குரிய கதைசொல்லும் நிகழ்ச்சிகள், பயிலரங்குகளை வழிநடத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இப்பணி இவருக்குச் சிறுவர் நூல்கள் குறித்தும் அண்மைய வாசிப்புத் திட்டங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.
Profile
Ms Zainab, a Tamil librarian in the Collection Planning & Development team, specializes in e-book selection and is knowledgeable in junior/children and adult fiction library collections in both English and Tamil. She is actively involved in content development, book clubs, storytelling sessions, and workshops for children, allowing her to stay updated on reading trends in Tamil children’s books and share them with the community.
சுருக்கவுரை
இளம் பிள்ளைகளின் மனங்களை ஆட்கொள்ளவும் விழுமியங்களை வளர்க்கவும் தமிழ்ச் சிறுவர் நூல்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன. இதனைக் குறித்து செல்வி சைனப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். அறிமுகமில்லாத உலகம், நபர்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கடந்துசெல்ல தமிழ் நூல்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதையும் இப்பயிலரங்கில் அறிந்துகொள்ளலாம். மேலும், சிறுவர் நூல்களின் வழி பிள்ளைகளுக்குப் பண்புகளைக் கற்பிக்கப் பெற்றோர்கள் பயன்படுத்தக்கூடிய உத்திகளும் பகிர்ந்துகொள்ளப்படும். பிள்ளைகளிடையே தமிழ்மொழியில் வாசிக்கும் ஆர்வத்தை வளர்க்க பெற்றோர்களுக்கு எப்படி வழிகாட்டலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம். அதோடு, தேசிய நூலக வாரியத்தால் தயாரிக்கப்பட்ட தமிழ் நூற்பட்டியலின் பரிந்துரைகளும் வாசிப்பு வளங்களும் பகிர்ந்துகொள்ளப்படும்.
Synopsis
This sharing session will introduce parents to the important role of Tamil children's books in shaping young minds and instilling values. It will explore how these books help children navigate unfamiliar worlds and situations, focusing on strategies for parents to use them as tools for teaching values. The session aims to empower parents with actionable guidance to inspire a love for reading Tamil books in their kids. Additionally, the speaker will share a curated selection of Tamil book recommendations and reading resources developed by NLB.