முனைவர் க.காவேரி
மூத்த விரிவுரையாளர்
எஸ்.ஆர்.நாதன் மனித மேம்பாட்டுப் பள்ளி
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்
தன்விவரம்
முனைவர் க.காவேரி, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளம்பருவக் கல்வித்துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவர் கல்வித்துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். தற்போது இளம்பருவக் கல்வியாளர்களுக்குப் பணியிடைப் பயிற்சியும் பணிக்கு முந்தைய பயிற்சியும் வழங்கி வருகிறார். இவர் கல்வியின் நிலைத்தன்மை, இளம் பிள்ளைகளுக்கு வழிகாட்டுதல், வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையே இருக்கும் பங்காளித்துவம், ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நிகழும் தரமான இருவழிக் கருத்துப்பரிமாற்றம் ஆகிய கூறுகளில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.
Profile
Dr G Kaveri, a senior lecturer at the Singapore University of Social Sciences, brings over 20 years of experience in early childhood education. Her research focuses on child-centred guidance, sustainability education, home-school partnership, and quality teacher-child interactions. She currently works with pre-service and in-service early childhood educators.
சுருக்கவுரை
பெற்றோர் அல்லது கல்வியாளர் என்னும் முறையில் இளம்பிள்ளைகளின் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை வளர்ப்பது நமது பொறுப்பாக உள்ளது. இந்தப் பயிலரங்கின் வாயிலாக முனைவர் காவேரி தம் ஆய்வின் அடிப்படையில் கண்டறியப்பட்ட சான்றாதாரங்களைக்கொண்டு செய்பாகங்கள் எவ்வாறு பிள்ளைகளின் சொல்வளத்தையும் கருத்துப்பரிமாற்றத் திறன்களையும் வலுப்படுத்த உதவுகின்றன என்பதைப் பகிர்ந்துகொள்வார். பங்கேற்பாளர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நடவடிக்கையில் ஈடுபட்டு அனுபம் வாயிலாகச் செய்பாகங்களின் பயன்களை அறிந்துகொள்வார்கள்.
Synopsis
As parents and educators, it is our responsibility to foster a love for the Tamil language in young children. In this workshop, Dr G Kaveri will demonstrate the evidence-based role loose parts play has in strengthening children's vocabulary and communication skills. Participants will engage in interactive loose parts play with their children, so as to experience the benefits of active facilitation.