திருமதி ராணி கண்ணா
நிறுவனர்
ஏ கே தியேட்டர்
தன்விவரம்
திருமதி ராணி கண்ணா, ஏ கே டி கிரியேஷன்ஸ், ஏ கே தியேட்டரின் இயக்குனர் ஆவார். இவர் தொழில்முனைவராகவும் பல்திறன்மிக்க கதைஞராகவும் கலைக் கல்வியாளராகவும் நடிகராகவும் வலம்வருகிறார். கற்பித்தல் அனுபவமும் தமிழ்மொழியில் இளங்கலைப் பட்டமும், பயன்பாட்டு மொழியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள இவர், கதைசொல்லல், நாடகமாக்கல்மூலம் தமிழ்மொழியை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். 2014-ஆம் ஆண்டுமுதல் பாலர்பள்ளிக்குரிய இசை நாடகங்களை இயக்கி வருகிறார். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், நூலகத் தன்னார்வலர்கள் முதலியோருக்குக் கதை சொல்லும் பட்டறைகளையும் நடத்தி வருகிறார். இவர் தம் படைப்புகளின்மூலம் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் வளர்ப்பதில் பேரார்வம் கொண்டவர்.
Profile
Mdm Rani Kanna, Director of AKT Creations and AK Theatre, is an entrepreneur, passionate storyteller, arts educator, and actor. With a background in teaching and a master's degree in Applied Linguistics, she is dedicated to developing language through storytelling and dramatization. Since 2014, she has directed preschool musicals and conducted storytelling workshops for educators, librarians and library volunteers. Rani is committed to promoting the love of Tamil language and culture through her work.
சுருக்கவுரை
பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியின் மீதுள்ள ஆர்வத்தைத் தூண்டும் உத்திகளைத் திருமதி ராணி கண்ணா இப்பயிலரங்கில் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். தமிழ்மொழி மீதுள்ள ஆர்வத்தையும் தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்கப் பாடல்களும் கதைகளும் துணைபுரிகின்றன. கதைசொல்லுதல், குழந்தைப்பாடல் உருவாக்குதல் மூலம் இயல்பாக எவ்வாறு தமிழ்மொழிப் புழக்கத்தை ஊக்குவிக்கலாம் என்பதை அறிந்துகொள்ள வாருங்கள்! பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதும் அவர்களை ஊக்குவிக்கும் சூழலை அமைத்துக்கொடுப்பதும் முக்கியம். தமிழ்மொழியில் பாடிப் பேசி மகிழும் அனுபவத்தை இப்பயிலரங்கின் வாயிலாகப் பெறலாம்.
Synopsis
In this workshop, Mdm Rani Kanna will present a range of innovative strategies parents can use to cultivate their children's interest in the Tamil language. The workshop will emphasize enjoying Tamil in songs and stories, using interactive tools and games to engage learning, and promoting the use of Tamil in daily conversations. It will also focus on storytelling, creating rhymes, and connecting with Tamil-speaking communities for practical language use. Celebrating children's progress and a supportive environment are both crucial for nurturing a love for Tamil. The workshop aims to equip parents with the tools to make Tamil learning a joyful and enriching journey for their children.