திருமதி நூர்மனிஷா சர்மணி
ஒருங்கிணைப்பாளர்
வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி
திருவாட்டி ஹுசைன் தஸ்வீனா
ஆசிரியர்
வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி
திருமதி திலகா வரன்
ஆசிரியர்
வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி
தன்விவரம்
திருவாட்டி தஸ்வீனா, திருமதி நூர்மனிஷா, திருமதி வரன் ஆகியோர் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற தமிழாசிரியர்களாவர். இவர்கள் மூவரும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் திறமைவாய்ந்தவர்கள். மேலும், கதைசொல்வதில் கைதேர்ந்தவர்கள். தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தையும் கதைசொல்லும் உத்திமுறையையும் கருவிகளாகக்கொண்டு இவர்கள் தம் மாணவர்களது கற்றல் அனுபவங்களை மேம்படுத்தி வருகிறார்கள். திருமதி நூர்மனிஷா, வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளியில் தமிழ்ப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராவார். இவர் ஓவியக் கலையில் வல்லுநர் சான்றிதழ் பெற்றதோடு ‘லெட்டர்லெண்ட் மொன்ட்டசாரி’ துறையிலும் அனுபவம் பெற்றுள்ளார். இவரின் வழிகாட்டுதலில் இவரது பள்ளித் தமிழ்மொழிப் பிரிவு தமிழில் எழுத்து அறிமுகத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. ‘மாய எழுத்துலகில் லலிதா’ என்னும் பகிர்வரங்கில் இவர்கள் பயன்படுத்தும் பயன்முனைப்புமிக்க உத்திகளைப் பெற்றோர்களுடனும் ஆசிரியர்களுடனும் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள்.
Profile
Mdm Thasveena, Mdm Normanisha Sarmani, and Mrs Waran are experienced educators with strong ICT skills and storytelling abilities which they use to enhance learning experiences. Mdm. Normanisha, a certified Art Therapist with expertise in Letterland Montessori, leads the Tamil Language Unit at West View Primary School as a Tamil Coordinator. With her guidance the Tamil Language Unit has developed an innovative Letter Recognition program in Tamil, incorporating generative AI, storytelling, Dolch lists, customized reading resources, whisper phones, and a novel letter recognition game. The teachers will share their effective strategies through the 'Lalitha in Letterland' workshop to empower parents and teachers.
சுருக்கவுரை
இந்தப் பயிலரங்கு, ‘Letter Land’ என்னும் எழுத்து அறிமுக அணுகுமுறையின் வாயிலாகப் பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு எழுத்துக்களை அடையாளங்காண உதவலாம் என்பதைக் குறித்து அமையும். இப்பயிலரங்கில் கதைசொல்லுதல், எழுத்துப்பயிற்சிக்கு வழிகாட்டுதல் போன்ற மொழி வளக் கூறுகளை எப்படிக் கையாளலாம் என்பதைக் குறித்து அனுபவம் வாய்ந்த மூன்று தமிழாசிரியர்கள் பகிர்ந்துகொள்வார்கள். கைகணினிகளில் (iPads) கையெழுத்துப் பயிற்சி நடவடிக்கை, செயற்கை நுண்ணறிவு உதவியோடு உருவாக்கப்பட்ட உச்சரிப்பு நடவடிக்கை, சொல்வதெழுதுதல் நடவடிக்கை ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ளப்படும். பிள்ளைகளின் தமிழார்வத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை அறிந்து பயன்பெறுங்கள்.
Synopsis
In this workshop, the Letter Land phonetic approach is used to support young learners by enhancing their Tamil vowel and consonant recognition. Using engaging storytelling, dance, technology, and creative writing, participants embody Tamil consonants and vowels to improve their understanding of letter forms and sounds. The session also includes using iPads for penmanship practice and AI for pronunciation and spelling challenges, and concludes with reflections on a magical leaf template to deepen appreciation for Tamil and strengthen the learning environment at home.
Workshop Materials
Mdm Normanisha Sarmani's, Mdm Hussain Thasveena's and Mrs Thilaga Waran's Speaker Slides.
Download here.