Outstanding Award
மேற்கோள்
எல்லாப் பிள்ளைகளும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்களிடம் சிறப்பியல்புகளும் தங்களை மேம்படுத்துவதற்குரிய திறன்களும் உள்ளன என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பிள்ளைகளின் கற்றல் பின்புலத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல் முறையைக் கையாண்டு, கற்றலை வழிநடத்துவதே எனது பொறுப்பாகும். இதனைக் கருத்திற்கொண்டு, அவர்கள் அறிவார்த்துடன் எதையும் சுயமாகக் கண்டறிந்து கற்க, பலதரப்பட்ட கற்றல் அனுபவங்களை உருவாக்கித் தருகிறேன்.
எழுத்து விளக்கம்
ஆசிரியர் சுதா தமது மாணவர்களின் கற்றல் அனுபவங்களை வளப்படுத்துவதற்கு எப்போதும் முனைப்புடன் செயற்படுபவர். அவர் தம்முடைய மாணவர்களின் பல்வேறு கற்றல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற உத்திமுறைகளை வகுப்பில் கையாள்கிறார். பாடத்திற்கேற்பக் கற்பித்தல் வளங்களையும் வகுப்பறைச் சூழலையும் அவ்வப்போது மாற்றி அமைத்துத் தம் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை இனிமையாக்குகிறார். இது மாணவர்களின் கற்றலை வளப்படுத்துவதோடு பண்பாடு சார்ந்த புரிந்துணர்வையும் மாணவர்களுக்கு அளிக்கிறது. பிள்ளைகளின் கற்றல் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் அதற்கேற்ப வகுப்பறை நடவடிக்கைகளை மாற்றி அமைப்பதிலும் பெற்றோருடன் இணைந்து செயற்படுகிறார். இவர் தம் மாணவர்களுக்கு ஏற்ற வளங்களைச் சிறப்பாக உருவாக்கும் திறமை வாய்ந்தவர். பெற்றோருடன் நல்லுறவைப் பேணித் தம் மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறார். தம் சக ஆசிரியர்களுடன் கற்றல் உத்திகளைப் பகிர்ந்துகொள்வதோடு புதிய ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.
Quote
I believe that every child is unique and that possesses strengths which enables the child to grow. As teachers, we play a vital role in facilitating differentiated learning in classroom activities. I create opportunities for my children to explore and learn at their own pace.
Write-up
Ms Sutha consistently demonstrates a strong commitment to enriching her students' learning experiences. She employs the Concrete-Pictorial-Abstract Approach and various materials to meet diverse learning needs, using animal shapes and concrete items to reinforce learning and deepen cultural understanding. She modifies teaching resources, redesigns the classroom environment, and establishes positive interactions to reinforce learning. Additionally, she applies Bloom's Taxonomy during storytelling and picture talks to support cognitive development and encourages peer collaboration for paired activities and discussions.